
நல்ல உடல்வாகு, கட்டமைப்பு மற்றும் அழகிய முகத்தோற்றத்தை கொண்ட ஸ்ருதி ஹாசனின் பிரச்சனை என்னவென்றால் உதடுகள் தானாம். தனது உதடுகள் சிறியதாக இருப்பதாக ஸ்ருதி ஹாசன் நினைக்கிறார். இதனால் அதனை சற்று பெரிதாக்க அவர் ஒரு சர்ஜரி செய்துள்ளார். பொதுவாக இவ்வாறு சர்ஜரிகள் செய்துகொள்ளும் நடிகைகள் அதுதொடர்பாக வாயே திறப்பது இல்லை. இந்தியில் கலக்கிய ஸ்ரீதேவி கூட மூக்கை சிறிதாக்க ஒரு ஆப்பரேஷன் செய்துகொண்டார். அதன் பின்னரே அவர் இந்தி திரையுலகை கலக்கவும் ஆரம்பித்தார். ஆனால் ஸ்ருதி ஹாசன் தான் செய்துகொண்ட ஆப்பரேஷன் தொடர்பாக வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார்.
ஆப்பரேஷன் செய்த பின்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை. அப்படி என்றால் தான் ஸ்ருதி ஹாசன் உதட்டில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று பார்க்க முடியும். ஆனால் ஸ்ருதி ஹாசன் உதட்டில் மருத்துவர்கள் புகுந்து விளையாடியுள்ளார்கள் என்பதுமட்டும் நன்றாகத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக