மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN

18ல் தான் செக்ஸும் துவங்கணும்: குஷ்பு

செக்ஸுக்கான சரியான வயது 18 தான் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து புதிதாக பாலியல் குற்றத் தடுப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தயார் செய்தது. அதில் மனமொத்த உறவுக்கான வயது 18ல் இருந்து 16க குறைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து ஏற்கனவே உள்ளது போன்று 18 வயதையே நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு கூறுகையில்,

செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும். அது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்.

வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது. ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது. அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்.

நடிகை பிரியாமணி கூறுகையில், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது 18 என்று இருக்கிறது. அதை 2 ஆண்டுகள் குறைப்பதால் பெரிய வித்தாயசம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக