மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN

அம்மாவை நடிக்க வைத்தார், என்னை துடிக்க வைத்தார்” :

ம்மா ராதா தமிழ்ப்படங்களில் நடித்து தென்னிந்திய மொழிகளில் பிரபலமானாலும், மகள் கார்த்திகாவுக்கோ பாலிவுட்டில் கோலோச்சுவது தான் நீண்ட நாள் கனவாம்.

ஆனால் பல தடவைகள் பாலிவுட்டுக்கு பெரிய சைஸ் வலைகளை வீசியும் அம்மணிக்கு சான்ஸ் மட்டுமே கிடைக்கவில்லை.

அப்போது தான் ஜீவாவுக்கு ஜோடியாக ‘கோ’ பட சான்ஸ் தமிழில் வந்தது. சரி இனிமேலும் தாமதித்தால் இனி நம் சினிமாக்கனவே வெறுங்கனவாகி விடும் என்று பயந்த அவர் கே.வி.ஆனந்த்திடம் கதையைக் கூட கேட்காமல் உடனே நடிக்க ஓ.கே சொல்லி விட்டார்.
அந்தப் படத்தின் ஹிட்டுக்குப்பிறகு தமிழில் ஒரு ரவுண்ட் வர இருந்த கார்த்திகாவை வம்படியாக தனது ‘அன்னக்கொடி’ படத்தில் கமிட் செய்த பாரதிராஜா அவரது மகன் மனோஜைப் போலவே கார்த்திகாவையும் ஹவுஸ் அரெஸ்ட் செய்து விட்டார்.

ஆமாம், என் அம்மாவை தொடர்ந்து நடிக்க வைத்த பாரதிராஜா என்னை மட்டும் துடிக்க வைத்து விட்டார். அதற்கு காரணம் அன்னக்கொடி படம் தான். அந்தப்படத்தில் நடித்ததாலோ என்னவோ, இதுவரை புதிய பட சான்ஸுகள் எதுவும் எதுவும் என்னைத் தேடிவரவில்லை என்று புலம்புகிறாராம் கார்த்திகா.

அதனால் இனி தென்னிந்திய மொழிகளை விட்டுவிட்டு பாலிவுட்டில் மட்டுமே நடிப்பது என்ற புதிய முடிவுக்கு வந்திருக்கிறார் கார்த்திகா. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான் என்பதால் பாலிவுட்டில் நடிப்பதை சிரமமாக நினைக்காத அவர் அதற்காக தயாராகி வருகிறார்.

‘அன்னக்கொடி’ படத்தில் கதைக்கேற்ப ஜாக்கெட்டே போடாமல் பின் முதுகை முழுசாகக் காட்டிய அவர் ஹிந்திப்படங்களில் இதைவிட படுகவர்ச்சியாக நடிக்கத் தயாராகி வருகிறாராம்.
‘இனி கிளாமர் விஷயத்தில் லிமிட் எதுவும் வைக்கப்போவதில்லை’ என்று சொல்லும் அவர் பாலிவுட்டில் சரியான எண்ட்ரிக்காக கதைகளை கேட்டு வருகிறாராம்.

அப்புறம் என்ன இனிமே உங்களுக்கு ஈஸியா சான்ஸ் கிடைக்கும் அம்மணி… 
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக