மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

தலைவா படத்தின் திருட்டு சிடிக்கள் பறிமுதல்

தமிழகத்தில் தலைவா படத்தின் திருட்டு சி.டி.க்களை பொலிசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தின் அத்வைதாபுரத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான வீடியோ கடையில் விஜய் ரசிகர்கள் ஆய்வு செய்தனர்.
அப்‌போது, தலைவா படத்தின் திருட்டு சி.டி.க்கள் ஏராளமாக வைத்திருந்ததை கண்டுபிடித்து பொலிசில் புகார் கூறினர்.
இதனையடுத்து சேலம் மேற்கு சரக கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கமலேஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பொலிசார் கடையை சோதனை செய்தனர்.
அப்போது, 3 ஆயிரம் திருட்டு சி.டி.க்களையும், சி.டி. ரைட்டர்கள், 10 கணனிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் தருமபுரி மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் முரளி(வயது 28), மரியம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமார்(வயது 27), சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அருள்பிரபு(வயது 36) ஆகியோரை பொலிஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் திருட்டு சிடி தயாரிப்பு கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட சேலத்தை சேர்ந்த ராஜாவை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக