மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் அஜித்: 15ம் திகதி-வீரம் தலைப்புடன் டீசர் மற்றும் ஆரம்பம் பட டிரெய்லர் வெளியீடு

கொலிவுட்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 54வது படத்திற்கு வீரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அஜித்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தில் சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர்.
தல அஜித்திற்கு ஆங்கில எழுத்தான V மிகவும் அதிர்ஷ்டமான எழுத்து என்பதால், வரலாறு, வாலி மற்றும் வில்லனைத் தொடர்ந்து இப்பெயரை சூட்டியுள்ளனர்.
இப்படத்தின் மிகவும் முக்கியமான ரயில் சண்டைக் காட்சியினை ஒடிசாவின் எல்லைப்பகுதியில் படமாக்கப்படமாக்கியுள்ளனர்.
பொங்கல் பரிசாக அஜித் ரசிகர்களுக்கு வெளிவரவிருக்கும் இப்படத்தின் First Look டீசர் எதிர்வரும் ஒகஸ்ட் 15ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இதனை தொடர்ந்து மேலும் ஒரு விருந்தாக ஓகஸ்ட் 15ம் திகதி ஆரம்பம் படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக