இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் கடந்த 2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் தனுஷ்.
தனுஷ் அறிமுகமான அதே ஆண்டில் தொலைந்த தன் மகன் கலைசெல்வன் தான் தனுஷ் என்று புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார் சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன்.
10ம் வகுப்பில் 365 மதிப்பெண் எடுத்திருந்த கலைச்செல்வன் மேற்கொண்டு படிக்க விருப்பமில்லாத்தால் தனது பெட்டியில் கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு 2002ம் ஆண்டில் வெளியே சென்றுவிட்டாராம் கலைச்செல்வன்.
அக்கடிதத்தில் அம்மா என்னை மன்னிச்சிடுங்க, எனக்கு இந்த படிப்பு பிடிக்கல, அதனால் நான் ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத் தோணுதோ அப்ப உங்களைத் தேடி வருவேன் என்று எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து கதிரேசன் கூறுகையில், தனுஷ் எங்களது மகன் என்று ஒப்புக்கொண்டால் மட்டும் போதும், அவரது சொத்து எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.
எனது மகன் என்று நிரூபிக்க எந்த பரிசோதனைக்கு கூட வரத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் கலைச் செல்வன் காணாமல் போனதாகப் பதியப்பட்ட வழக்கு இன்று வரை முடிவுக்கு வராமல் இருக்கிறதாம்.
தனுஷை சுற்றும் இந்த சர்ச்சைகளுக்கு அவரின் வார்த்தைகள் தான் தற்போது முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக