மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN

ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அஜித்

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் டூப் போடமல் ஒடும் ரயிலில் சண்டை போடத் தயாராகி வருகிறார் நடிகர் அஜித்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ஆரம்பம் படம் குறித்து ஆரம்பத்தில் எந்த செய்தியும் வெளிவராமல் இருந்தது.
இப்போது படம் வெளியாக தயாராக இருப்பதால் படம் குறித்தான பல்வேறு செய்திகளும் வெளிவரத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜித் ஓடும் ரெயிலில் சண்டை போடுவது போன்ற காட்சியை படமாக்க இருக்கிறார்களாம்.
இதற்காக ஒடிஷா-ஆந்திரா எல்லையில் உள்ள ரயில் பாதையில் இந்த காட்சியை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இப்படத்தில் ரயில் சண்டை காட்சியில் அஜித் டூப் போடாமல் நடிப்பதாக வந்துள்ள செய்தி படக்குழுவினரை மட்டுமல்லாது, அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக