
இதனை ஆர்யா பிரியாணி விருந்து வைத்து கொண்டாடியதாக கூறப்பட்டது. ஆர்யா வீட்டில் நடந்த இந்த விருந்தில் நயன்தாராவும் பங்கேற்றார்.நயன்தாரா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். ஆர்யா ஜோடியாக ராஜாராணி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி இயக்குகிறார்.
படப்பிடிப்பில் நயன்தாரா-ஆர்யா இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் தகவல்கள் பரவின. இதனை இருவரும் மறுக்கவில்லை.இந்த நிலையில் தான் நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் இன்று இரவு 9 மணிக்கு மேல் திருமணம் நடக்க உள்ளதாக நேற்று மாலை பத்திரிகை அலுவலகங்களுக்கும், டி.வி.க்களுக்கும் திடீரென அழைப்பிதழ் வந்தது. அதில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்வது போன்ற படம் இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு டெலி விஷன்கள் நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் நாளை திருமணம் என்று அவசர, அவசரமாக செய்தி ஒளிபரப்பின. பத்திரிகைகளிலும் செய்தி வந்தது.
ஆனால் இது குறித்து விசாரித்த போது திருமணம் உண்மையல்ல என்பது தெரியவந்தது. ராஜாராணி பட டிரெய்லர் விளம்பரத்துக்காக இந்த போலியான திருமண அழைப்பிதழை அச்சிட்டு வெளியிட்டு இருப்பது தெரிய வந்தது. நயன்தாரா-ஆர்யா சம்மதத்தோடு தான் இதனை வெளியிட்டார்களாம். விளம்பரத்துக்காக இப்படியுமா பண்ணுவார்கள் என்று ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக