மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பான் இனணயம் ! MANKUMBAN

கோடிகளை சொல்லியடிக்கும் மெரினா நாயகன்

சின்னத்திரைவாசிகளுக்கு சினிமா செட்டாகாது என்ற செண்டிமென்ட்டை திருத்தி எழுதியவர் மெரினா நாயகன்.
அவர் நடித்த சில படங்கள் மீடியம் ஹிட்தான் என்றாலும், அவரை ரஜினி ரேஞ்சுக்கு உயர்த்தி பப்ளிசிட்டி கொடுத்து பெரிய ஆளாக்கி விட்டனர்.
அதனால் படத்துக்குப்படம் ஒரு கோடி, இரண்டு கோடி என்று உயர்த்தி படாதிபதிகளை மிரட்டி வருகிறார் நடிகர்.
எனினும் அவருக்கு பெரிய ரசிகர் வட்டம் இருப்பதாக கருதும் சில கம்பெனிகள் மீண்டும் மீண்டும் அவரை ஒப்பந்தம் செய்து வைத்திருக்கின்றன.
இந்நிலையில், ஒரு கல் ஒரு கண்ணாடி பட நாயகனும் தனது கம்பெனி தயாரிக்கும் படத்தில் நடிக்க மேற்படி நடிகரை பேசி வைத்திருந்தாராம்.
ஆனால் அதற்கான அட்வான்சையும் வாங்கிய நடிகருக்கு அவர் தருவதாக சொன்ன சம்பளம் திருப்தியாக இல்லையாம். அதனால், இந்த தொகை பத்தாது. இன்னும் சில கோடிகளை தர வேண்டும் என்று கண்டிசனாக சொல்லியுள்ளார்.
இதனால் கடுப்பான கண்ணாடி நடிகர், இப்படியொரு படமே தயாரிக்க வேண்டாம் என்று அந்த முயற்சியையே கிடப்பில் போட்டு விட்டாராம்.
அதனால் ரொம்ப ஓவரா கேட்டுட்டோமோ என்று புலம்பிக்கொண்டு நிற்கிறார் மெரினா நாயகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக