ஆனால் கமலின் இரண்டாவது மகள் அக்ஷராவோ நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
கதாநாயகியாக பல வாய்ப்புகள் வந்தும் அவற்றை புறந்தள்ளிவிட்டு, இயக்குனராகி திரைக்கு பின்நிற்க ஆசைப்பட்ட அவருக்கு இப்போது திரையில் தோன்ற ஆசைவந்துள்ளதாம்.
அக்கா ஸ்ருதிஹாசனைபோல் தானும் நடிகையாக விரும்புகிறாராம். தெலுங்கு படத்தில் அறிமுகமாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஹிந்தியிலும் வாய்ப்புகள் வந்துள்ளன. தெலுங்கு படத்தை முடித்து விட்டு ஹிந்தி, தமிழ், படங்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக